ஜிம்முக்கு போகாமல் ஃபிட்டாக இருக்க‌ இதை செய்யுங்கள்!




ஆரோக்கியம் என்பது மாறி வரும் இன்றைய சூழலில் ஒரு அரிய வார்த்தையாக மாறி விட்டது. பெருகி வரும் நோய்களுக்கு தடா சொல்ல உடற்பயிற்சி நமது வாழ்க்கை முறைகளில் கட்டாயப்படுத்தப்பட வேண்டிய ஒன்று. பலரும் வாக்கிங், ஜாக்கிங், ஸ்விம்மிங் என  இருக்க செய்வது போல இப்போது ஜிம்மிற்க்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதெல்லாம் ஒருபுறம் இருக்க உடற்பயிற்சிகள் தவிர்த்து நாம் அன்றாடம் உணவு முறைகளிலும் ஆரோக்கியத்தை பேணலாம். அதற்கான எளிய வழிகள் இதோ,
வீட்டுத்தோட்டம் போடுங்கள்:
வெளியே சென்று மார்க்கெட்டில் செயற்கை உரங்கள், ஹைபிரிட் காய்கறிகள் வாங்குவதற்கு பதில் நமது வீட்டிலேயே எளிய முறையில் காய்கறி தோட்டம் போடலாம். நமது பராமரிப்பில் வளருவதோடு மட்டுமல்லாமல், நமது செலவையும் கணிசமாக குறைக்கும். உடல் ஆரோக்கியத்துக்கும் க்யாரண்டி.
கடை உணவை தவிருங்கள்:
முடிந்த அளவு கடைகளில் துரித உணவுகள் அதிகம் சாப்பிடுவதை தவிருங்கள். உணவின் ருசிக்காக அதில் சேர்க்கப்படும் பொருட்களால் நமது உடல் ஆரோக்கியம் கெடுவதோடு மட்டுமல்லாமல் செரிமான மண்டலமும் பாதிப்புக்குள்ளாகும். இது மட்டுமல்லாமல் உடல் பருமனில் ஆரம்பித்து கேன்சர் வரையிலான நோய்களுக்கு இது வழி திறக்கும்.
எளிய பயிற்சிகள் செய்யுங்கள்:
வேலை எதுவும் செய்யாமல் இருப்பது சோம்பேறி தனமாக இருக்காதீர்கள். வீடு சுத்தம் செய்வது, பக்கத்தில் கடைகளுக்கு செல்வது, நண்பர்களை நேரில் சந்தித்து பேசுவது, குழந்தைகளுடன் விளையாடுவது, சைக்கிளிங் செய்வது, தோட்ட வேலைகள் போன்ற வகையில் நேரத்தை செலவிடுங்கள். 

விளையாடுங்கள்:
வார இறுதி நாட்களில் விளையாடுவதற்கென நேரம் ஒதுக்குங்கள். விளையாடுவதென்றால் மொபைல் கேம்ஸோ, வீடியோ கேம்ஸோ கிடையாது. உடல் ஆரோக்கியம் மேம்பட களத்தில் இறங்கி விளையாடுங்கள். அதோ போல் உங்கள் மூளைக்கு வேலை வைக்கும் விளையாட்டுகளையும் உங்கள் ப்ளே லிஸ்ட்டில் டிக் செய்யுங்கள்.
இயற்கை உணவுகளை தேர்ந்தெடுங்கள்:
கூடுமானவரை இயற்கை உணவுகளை தேர்ந்தெடுங்கள். உணவே மருந்து என்பதை மறக்காதீர்கள். அதே போல் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய வைத்தியம் செய்வதை தவிருங்கள்.
எலக்ட்ரானிக் பொருட்கள் தவிர்:
மொபைல், கம்ப்யூட்டர், இணையம் போன்ற உங்கள் நேரத்தையும், ஆரோக்கியத்தையும் கொல்லும் எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள். தேவையானவற்றிற்க்கு உபயோகிப்பது தவறில்லை. அதிலேயே மூழ்கி கிடப்பது என்பது பல்வேறு நோய்களுக்கான வடிகால்.
ச. ஆனந்தப்பிரியா


EmoticonEmoticon

Ads Inside Post