பந்து வீச்சில் 'ஸ்டார்' ஸ்டார்க்: முகமது ஷமி 'சூப்பர்'!

லகக் கோப்பை போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் அசத்தியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமியும் பேட்ஸ்மேன்களை மிரட்டும் வகையில் பந்து வீசியுள்ளார்.

சுமார் 145 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் மிட்செல் ஸ்டார்க், இந்த உலகக் கோப்பையில் மிகச்சிறந்த பந்துவீச்சாளராக பேட்ஸ்மேன்களை மிரட்டி வருகிறார். 5 போட்டிகளில் விளையாடியுள்ள அவர்,  இதுவரை 16 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய வீரர் முகமது ஷமி 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தை பெறுகிறார்.
நியூசிலாந்தின் பவுல்ட் 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஸ்காட்லாந்தின் டேவியும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜெரோம் டெய்லரும், பாகிஸ்தான் வீரர் வாகாப் ரியாசும் தலா 14 விக்கெட்டுகளை கைப்பற்றி அடுத்தடுத்த இடத்தில் உள்ளனர்.


உலகக் கோப்பை போட்டியில் பல பந்து வீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாக விளங்க, குறைந்த ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த வீரர்கள் வரிசையில் நியூசிலாந்தின் டேனியல் வெட்டேரி முதலிடத்தை பெறுகிறார்.
6 போட்டிகளில் 55.2 ஓவர்களை வீசியுள்ள அவர், சராசரியாக ஒரு ஓவருக்கு 3.21 ரன்களை விட்டுக் கொடுத்துள்ளார். 37 ஓவர்களை வீசியுள்ள ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் சாராசரியாக 3.76 ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டாவது இடத்தை பிடிக்கிறார்.
பாகிஸ்தான் வீரர் அலி 38 ஓவர்களை வீசி 4.07 ரன்களை விட்டுக் கொடுத்திருக்கிறார். தென்ஆப்ரிக்காவின் மோர்கல் 52.1 ஓவர் வீசி 4.08 ரன்களையும், நியூசிலாந்தின் பவுல்ட் 56 ஓவர்களை வீசி 4.17 ரன்களையும் விட்டுக் கொடுத்துள்ளனர்.

இந்த உலகக் கோப்பையில் ஒரே இன்னிங்சில் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்கள் வரிசையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலிடம் பிடிக்கிறார். டி வில்லயர்சின் புயல் வேக தாக்குதலில் ஹோல்டர் வீசிய பந்துக்கள் சிக்சரும் பவுண்டரியுமாக பறக்க 10 ஓவர்கள் வீசிய அவர், 104 ரன்களை ஒரே இன்னிங்சில் விட்டுக் கொடுத்தார். அடுத்ததாக ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான்,  ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஓவர்கள் வீசி 102 ரன்களை கொடுத்துள்ளார்.
அயர்லாந்துவீரர் கெவின் ஓ பிரையன், தென்ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் எதிரான ஆட்டத்தில் 7 ஓவர்கள் வீசி 95 ரன்களை வாரி வழங்கினார்.அதே போல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் இதே கெவின் பிரையன் 10 ஓவர்கள் வீசி 90 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஆப்கானிஸ்தான் வீரர் சத்ரான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 10 ஓவர்களில் 89 ரன்களை கொடுத்துள்ளார்.


EmoticonEmoticon

Ads Inside Post