காயத்தால் முகமது ஷமிக்கு கிடைத்த ரூ.2.2 கோடி!



காயம் காரணமாக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமிக்கு 2.2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கியுள்ளது பி.சி.சி.ஐ.

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி. இவர் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். அந்த தொடரில் 17 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இந்த தொடருக்கு முன் அவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் லேசாக இருந்தபோதே அவர் அணியில் இருந்து விலகி இருக்க பிசிசிஐ விரும்பாததால் தொடர்ந்து விளையாட வைக்கப்பட்டார். இதனால் அவரது காயம் வீரியத்தன்மையடைந்தது.

அத்துடன் அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டு ஒரு வருடம் ஓய்வில் இருக்க வேண்டி நிலை ஏற்பட்டது. இதனால் 2015ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அவர் இடம்பெறவில்லை. காயத்துடன் தொடர்ந்து விளையாட வைத்ததால்தான் ஐ.பி.எல். தொடரில் இடம்பிடிக்க முடியவில்லை என்று பி.சி.சி.ஐ. நினைத்தது. இந்த நிலையில், அவருக்கு 2 கோடியே 23 லட்சத்து 12 ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் இழப்பீடாக வழங்கியுள்ளது.

ஒவ்வொரு மாதமும் பி.சி.சி.ஐ. செலவழிக்கும் பணம் குறித்து அதன் இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்படும். இதில் தான் இந்த தகவல் தெரியவந்துள்ளது.


EmoticonEmoticon

Ads Inside Post