அஜித்தின் 'AK 57'ல் நாயகி காஜல் அகர்வால்?



வீரம், வேதாளம் படங்களைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில் நடந்தது. அப்படத்திற்கு AK57 என்று தற்காலிகமாகப்  பெயரிட்டுள்ளனர்.

' உலகம் சுற்று வாலிபன்' 'ஜப்பானில் கல்யாணராமன்' படங்களைப் போன்று முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே படமாக்க போகிறார்கள். ஜார்ஜியா, பல்கேரியா, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளிலேயே படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. எந்தெந்த நாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது என்று டைரக்டர் சிவா, கேமராமேன் வெற்றி, ஸ்டன் மாஸ்டர் சில்வா, ஆர்ட் டைரக்டர் மிலன் ஆகியோர் கொண்ட குழு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று லொகேஷன்களை பார்த்துவிட்டு திரும்பி இருக்கிறது.

இப்படத்தின் நாயகியாரென்பதே சமீபத்தில் கேலிவுட்டைச் சுற்றிவரும் கேள்வி. அஜித்துக்கு இந்தப் படத்தில் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தின் கதையை காஜல் அகர்வாலுக்கு தெரிவிக்கப்பட்டதாம், அவரும் படத்தில் நடிக்க சம்பதித்திருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால் அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் மட்டும் இன்னும்  நடைபெறவில்லை என்கிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

அனுஷ்கா, ரித்திகாசிங் மற்றும் தமன்னாவிடன் ஆகியோரிடம் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க சில மாதங்களுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால் இப்போது காஜல் அகர்வால் பெயர் அடிபடுகிறது.தமிழில்  விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ்,கார்த்தி  ஆகிய டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த காஜல், அடுத்ததாக அஜித்துடன் இணையவிருப்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்தின் புதிய படத்தில் காமெடி ரோலில் கருணாகரன் நடிக்கவிருக்கிறார். மேலும் மற்ற நடிகர்  நடிகைகள் முடிவானதும், ஒரே கட்டத்தில் ஒட்டு மொத்த படப்பிடிப்பையும் வெளிநாட்டில் முடித்துவிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post