சன்னி லியோன் ஆங்கரிங்கில் கலக்கும் ஸ்ப்ளிட்ஸ் வில்லா சீஸன் 9 ஸ்பெஷல்!



இதோ பரபரப்பான ட்விஸ்ட்டுகள், சண்டைகள், சர்ச்சைகள் என மீண்டும் களமிறங்கிவிட்டது எம் டிவியின் Splits Villa சீசன் 9. இளைஞர்கள் அதிகம் விரும்பும் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியா முழுக்க ரசிகர்கள் என்றால் முதலும் முக்கியக் காரணமும் சன்னி லியோன் மற்றும் ரான்விஜய் சிங் தொகுத்து வழங்குவதே.
நிகழ்ச்சி ஆரம்பித்தது முதல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வுகள், சம்பவங்கள் என இந்த ரியாலிட்டி ஷோவுக்கு இப்போது இன்னும் ரசிகர்கள் பட்டாளம் கூடியிருக்கிறது. ஒன்பதாவது சீசனும் வெற்றிகரமாக ஆரம்பிக்க இம்முறை கொஞ்சம் சர்ச்சைகளை அதிகம் கிளப்ப திட்டமிட்டுவிட்டார்கள் போல. ஆண்களை அடக்கும் பெண்கள் என்னும் கான்செப்ட்டைக் கையில் எடுத்துள்ளனர்.
நிகழ்ச்சியில் பங்குபெறும் பெண்கள் சாதாரணமானவர்களாக இருக்க, சீரியல், விஜே என்று லைம் லைட்டில் இருக்கும் ஆண்களுக்கு இணையாக அவர்கள் கலாய்த்துத் தள்ளுகின்றனர். ஆறு பெண்கள், 15 ஆண் பிரபலங்கள் இப்போது கொஞ்சம் பேச ஆரம்பித்துள்ளனர். ‘உங்களுக்குப் பிடித்தவை, பிடிக்காதவைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்ல ஆறு பெண்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறினர் ஆண் பிரபலங்கள். இதில் சன்னிலியோன் ஆங்கரிங் வேறு. 15 ஆண்களை வாயடைத்து நிற்க வைக்கும் ஆறு பெண்கள். கேட்கவா வேண்டும்.பார்க்கலாம் யாரெல்லாம் அழுகிறார்கள், யாரெல்லாம் டிவி டி.ஆர்.பி’ஐ எகிற வைக்கிறார்கள் என்பதை. 
இந்த நிகழ்ச்சியின் டிரெய்லரிலேயே ஆண்களும் பெண்களும் நீச்சல் குளத்தில் சண்டையிடுவது போலும், அழுவது போன்றும் உள்ளனர்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post