முதல்வர் ஜெயலலிதா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! - போலீஸ் தீவிர விசாரணை



சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பரபரப்பு நிலவியது. இதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்றிரவு சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட மர்மநபர், 'சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள முதல்வர் ஜெயலலிதா வீட்டில் குண்டுவெடிக்கும்' எனக் கூறிவிட்டு இணைப்பை துண்டித்து இருக்கிறார்.

இதையடுத்து, போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அவர்களின் விசாரணையில், அந்த மர்ம தொலைபேசி அழைப்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் இருந்து வந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள போலீசார், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post