காசி தியேட்டரில் பரபரப்பு – கபாலி பேனரை அகற்றிய ரஜினி ரசிகர்கள்









கபாலி படத்தின் முதல் நாள் காட்சிகள் பெரும்பாலும் கார்ப்ரேட் புக்கிங் மூலம் கம்பெனிகளுக்கு விற்கப்பட்டுவிட்டதால் தான் சாதாரண ரசிகர்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
கார்ப்ரேட் நிறுவனங்களும் தங்கள் பணியாளர்கள் படம் பார்ப்பதற்காக, என்ன விலை வேண்டுமானாலும் (லட்சக்கணக்கில் இருந்தால் கூட) கொடுக்க தயாராக இருக்கின்றன, எனவே இதை பயன்படுத்தி தியேட்டர்கள் நல்ல தொகை ஈட்டிவிடுகின்றன. அதனால் மணிக்கணக்கில் கவுண்ட்டரில் காத்திருக்கும் சாதாரண ரசிகனுக்கு டிக்கெட் கிடைப்பதில்லை.
இப்படி பெரிய படங்களில் சாதாரண ரசிகனை ஏமாற்றிவிட்டால், மற்ற சின்ன பட்ஜெட் படங்களை யார் தியேட்டருக்கு வந்து கவுண்டரில் காசு கொடுத்து பார்ப்பார்கள்.
இதை காரணம் காட்டி, ரஜினி ரசிகர்கள் இன்று அதிகாலை சென்னை காசி தியேட்டர் முன்பு போராட்டம் நடத்தினர். மேலும் அங்கு ரசிகர்கள் சார்பில் வைத்திருந்த பேனர்களையும் அகற்றினர்.
சென்னையின் மற்ற திரையரங்குகளிலும் பெரும்பாலும் இதே நிலைமைதான். திருப்பூர் போன்ற மற்ற மாவட்டங்களிலும் எப்போதும் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தமுறை டிக்கெட் கிடைக்கவில்லை என்று கண்ணீர்விட்டு புலம்புகின்றனர்.
இதற்கு காரணம் தயாரிப்பாளர் தாணுவும், ரஜினி மன்றத்தில் உயர்பதவியில் இருப்பவர்கள் தான் எனவும் இவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


EmoticonEmoticon

Ads Inside Post