ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு ஹைகோர்ட் திடீர் நோட்டீஸ்


லவச பட்டா வழங்கிய விவகாரத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னை சம்பந்தமாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், "மதுரை கலெக்டராக சகாயம் இருந்த போது நிலையூரில் 17 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டது. அந்த இடம், ஏற்கெனவே ஆதிதிராவிடர்களுக்கு வழங்கப்பட்ட இடம் என்பதால் அவர்கள் பிரச்னையில் ஈடுபட்டனர். இதனால், அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மாற்று இடம் வழங்குவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின்பு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, 17 பேரும் உரிய இழப்பீடு கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு உதவும் வகையில் இந்த மனுவுக்கு ஏற்கெனவே இருந்த கலெக்டர் (சுப்பிரமணியன்) மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆகியோர் பதில் மனுத் தாக்கல் செய்தனர். பதில் மனுவில், உண்மையை மறைத்து சில விஷயங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். எனவே, அதுபோன்று பதில் மனுத் தாக்கல் செய்தவர்களைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி எம்.வேணுகோபால், இது தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

Related Posts


EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv

Ads Inside Post