பெரும்பாலான மொபைல் நிறுவனங்கள் பயன்படுத்தும் மென்பொருள் ஆண்ட்ராய்டுதான். கூகுள் நிறுவனத்தினர், தங்களது ஆண்ட்ராய்டு மென்பொருளுக்கான ஒவ்வொரு அப்டேட்டிற்கும் , புதுப்பெயரை யோசிப்பார்கள். அவை எப்போதும் தின்பண்டங்களாகத்தான் இருக்கும் . அதன்படி புதிய வெர்ஷனான ஆண்ட்ராய்டு N-ற்கு என்ன பெயர் வைக்கலாம் என சமூக வலைதளங்களில் போட்டியெல்லாம் நடத்தினார்கள். தற்போது அதற்கு நௌக்கட் என பெயர் வைத்து இருக்கிறார்கள்.
மார்ஷ்மெல்லோவை விட நௌக்கட்டில் என்னெவெல்லாம் ஸ்பெஷலாக இருக்கும் என்பதை பார்ப்போம்...
* மல்ட்டிடாஸ்கிங்
முந்தைய அப்டேட்களிலும் மல்ட்டிடாஸ்கிங் என்பது இருந்தது. நீங்கள் ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது, அதை மினிமைஸ் செய்துவிட்டு,கேமரா ஓப்பன் செய்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு, மீண்டும் ஃபேஸ்புக்கை மேக்ஸிமைஸ் செய்ய இயலும். முன்பு இருந்த நிலையிலேயே ஃபேஸ்புக் இருக்கும். தற்போதைய அப்டேட்டின்படி இதை, ஃபேஸ்புக்கை ஓப்பனில் வைத்துக்கொண்டே கேமராவை பயன்படுத்த முடியும். இனி உங்கள் திரையில், இரு ஆப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும்

* பேட்டரி சேவர்
மொபைலில் பலரும் சந்திக்கும் பெரிய சிக்கல் பேட்டரி சேமிப்புதான். மொபைலை எதுவும் செய்யாமல் வைத்து இருந்தாலும் , சில மணி நேரத்தில் 20% பேட்டரியை ஆப்ஸ் தின்றுவிடும். இதை சரி செய்ய, நௌக்கட்டில் முயன்று இருக்கிறார்கள். மொபைலின் ஸ்கீரின் ஆஃப் ஆனவுடன், இது பேட்டரியை சேமிக்க ஆரம்பிக்கும்.

* இன்ஃபர்மேட்டிவ் செட்டிங்க்ஸ்
மொபைலில் ஏதேனும் பிரச்னை என்றால், முதலில் செட்டிங்க்ஸ் ஆப்சனுக்கு சென்று ஏதாவது செய்ய முடியுமா என்றுதான் பார்ப்போம். ஆனால், செட்டிங்க்ஸில் ஒவ்வொரு டேப்பையும், ஓப்பன் செய்துதான் பார்க்க முடியும். நௌக்கட் அப்டேட் மூலம், இனி செட்டிங்ஸிலேயே, மொபைலில் ஸ்டோரேஜ் எவ்வளவு இருக்கிறது, வைஃபை என்ன பெயரில் கனெக்ட் ஆகியிருக்கிறது என்பதைப் பார்க்க முடியும்.
* இனி ஆண்ட்ராய்டிலும் Alt + Tab
கணினியில் விண்டோஸ் மென்பொருள் பயன்படுத்துபவர்கள், Alt + tab பட்டனை அதிகம் பயன்படுத்துவார்கள். இதன்மூலம், முந்தைய ஸ்கிரீனுக்கு நம்மால் செல்ல முடியும். (ஆப்பிள் யூசர்கள் command + tab பயன்படுத்துவார்கள்) .அதே போல், மொபைலில் இருக்கும் ரீசன்ட் பட்டனை அழுத்தும் போது, (நம் மொபைலில் back, home, recents என்கிற ரீதியில் இருக்கும் ) அது முந்தைய அப்ளிகேசனிற்கு செல்லும். ரிமோட்டில் தொலைக்காட்சி சானல்களை ஜம்ப் செய்வதைப் போல, இனி மொபைலிலும் செய்யலாம்.

* ஒன் க்ளிக் கிளீயர்
மார்ஷ்மெல்லோ அப்டேட்டில் இது இருந்தாலும், இதை மிகவும் தெளிவாக நௌக்கட்டில் குறிப்பிட்டிருக்கிறார்கள். மொபைலின் வலது மேல் மூலையில் Clear All என்ற ஆப்சனை தந்து இருக்கிறார்கள். இதன்மூலம், ஒரே க்ளிக்கில், மொபைலில் இருக்கும் எல்லா ஆப்களையும் மூட முடியும்
இந்த ஆண்டின் இறுதியில், நௌக்கட் அப்டேட் வரும் என எதிர்பார்க்கலாம்.

- கே.ஜி.கார்த்திகேயன்
EmoticonEmoticon