கபாலி பிரீமியர் ஷோ Live Updates



ரஜினியின் கபாலி படத்தின் முதல் ஷோ தொடங்கிவிட்டது. இதன் முதல் பிரீமியர் காட்சியாக மலேசியாவில் தொடங்க இருந்தது. அதன்படி இன்னும் 30 நிமிடத்தில் மலேசியாவில் கபாலி படம் தொடங்க இருக்கிறது.கபாலி திரையிடப்படும் மலேசியா திரையரங்கு முன்பு கபாலி ஸ்டிக்கர் ஒட்டிய காருடன் ரசிகர்கள் வந்து கலக்கிய காட்சி, தமிழத்தை விட மலேசியாவில் இரண்டு மடங்கு அதிக கொண்டாட்டம்.

கபாலி மலேஷியா ப்ரீமியர் காட்சி தொடங்கிவிட்டது, ரசிகர்கள் ஆரவாரத்துடன் திரையரங்கிற்கு வர, படம் தொடங்கி சில நிமிடம் ஆகியுள்ளது.
மலேசியாவை தொடர்ந்து சிங்கப்பூரிலும் ப்ரீமியர் காட்சி இன்னும் சில நொடிகளில் தொடங்கவுள்ளது, ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது
மலேசியா ப்ரீமியர் காட்சியில் நடிகை தன்ஷிகா, இயக்குனர் ராஜேஷ், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன், தயாரிப்பாளர் டி.சிவா, மாஸ்டர் தினேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.கபாலி படத்தை பார்க்க குடும்பம் குடும்பமாக கூட்டம் வந்துள்ளது, குறிப்பாக குழந்தைகள் பலர் கபாலி டி-ஷர்ட் அணிந்து அசத்திவிட்டார்களாம்.




EmoticonEmoticon

Ads Inside Post