Blogger Pages

Monday, 25 July 2016

கபாலி டிக்கெட்டால் தஞ்சை கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!




தஞ்சை : சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு போனில் பேசிய நபர், ‘ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி திரைப்படத்துக்கு சென்னையில் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.
எனவே தஞ்சையில் உள்ள கோயில்களில் இன்னும் சில நேரங்களில் வெடிகுண்டு வெடிக்கும்” என்று மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தஞ்சை எஸ்பி அலுவலகத்துக்கு சென்னை போலீசார் தகவல் தெரிவித்தனர். தஞ்சை போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் தஞ்சை பெரிய கோயிலில் சோதனை நடத்தினர்.
பக்தர்களையும், அவர்கள் கொண்டு வந்த உடமைகளையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர். கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் அனைத்து பதிவுகளையும் கண்காணித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற அனைத்து கோயில்களிலும் தீவிரமாக சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment