கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனாக விளங்குபவர் துனியா விஜய். இவர் 2007-ம் ஆண்டு ‘துனியா‘ என்ற கன்னட படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். இதனால், முதல் படத்தின் பெயருடன் இவர் துனியா விஜய் என்று அழைக்கப்படுகிறார். அவர் இதுவரை சுமார் 19 கன்னட படங்களில் நடித்துள்ளார்.
அவருக்கு திருமணமாகி நாகரத்னா என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துனியா விஜய்க்கும், அவருடைய மனைவி நாகரத்னாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்தனர். விவாகரத்து கோரி துனியா விஜய் பெங்களூரு குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடைபெறும் போது இருவரும் சமாதானமாகி சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர். இதையடுத்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த வழக்கை துனியா விஜய் வாபஸ் பெற்றார். இந்த விவகாரம் முடிந்து சுமார் ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் துனியா விஜய் 2-வது திருமணம் செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கீர்த்தி என்ற பெண்ணை துனியா விஜய் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்கு ஒரு குழந்தை இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் கணவன்-மனைவி ஒன்றாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படங்கள் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது. 2-வது திருமணம் குறித்து துனியா விஜய் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. துனியா விஜய்யின் இந்த 2-வது திருமணத்திற்கு முதல் மனைவி நாகரத்னா மற்றும் குழந்தைகள் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

EmoticonEmoticon